649 Lotto

லொட்டரி டிக்கட்

டீவியில் மகாபாரதத்தில் சூதாட்டப்படலம் போய் கோண்டிருந்தது.

சகுனி எப்படி தன் எண்ணத்தின்படி சொக்கட்டான் காய்களை நகர்த்தி, சூதாட்டத்தில் தர்மரை வெல்லும் காட்சி. ஜோதிலிங்கம் காட்சியை இரசித்தபடி இமை வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மனைவி பார்வதி சமையலறைக்குள் இடியப்பம் அவித்துக்கொண்டிருந்தாள். டிவியில் போய்க்கொண்டிருக்கும் காட்சியை இரசித்தவாரே, கிலாசில் உள்ள விஸ்கியை சுவைத்தார் ஜோதிலிங்கம்;.

இளைஞனாக இருக்குமு;போதே ஜோதிலிங்கத்திற்கு சூதாட்டத்தில் ஆர்வமிருந்தது. படிக்கும் காலத்தில் “என்ன பந்தயம்?” என்ற வார்த்தைகளை நண்பர்களோடு போட்டி என்று வந்தால் அடிக்கடி அவன் பாவிப்பது வழக்கம். கொழும்பில் வேலை செய்யும் போது, தினமும் “பூக்கீஸ்”; என்று சூதாடுபவர்களால் அழைக்கப்படும் குதிரைப் பந்தயப் பணயக்காரார்களிடம்  போய் குதிரைகள் மேல் பணம் கட்டிவருவார்;. பல தடவை வென்றுமிருக்கிறார். இங்கிலாந்தில், லெஸ்டர் பிக்கட், விலி கார்சன் போன்ற ஜொக்கீஸ் என அழைக்கப்படும் குதிரை ஓட்டுநர்களின் பெயர்களும,; வேகமாக ஓடும் குதிரைகளின் பெயர்கள்; எல்லாம் ஜெயத்துக்கு அத்துப்பாடம். குதிரை ஓட்டத்தில் அவருக்கு ஆசையை உண்டுபண்ணியது அவரோடு கொழும்புக் கச்சேரியில் ஒன்றாக வேலை செய்த நாணயக்கார என்ற சிங்கள அரசாங்க ஊழியர். அவரை அன்பாக “நாணயம்” என்றே ஜோதிலிங்கம் அழைப்பார். பதிலுக்கு ஜோதிலிங்கத்தை “ஜோதி“என்று நாணயக்கார அழைப்பார். நாணயமும்; ஜோதியும் பகற் போசன நேரத்தின் போது தவறாது பூக்கீ;ஸ் கடைக்குப் போய் குதிரைகள் மேல் பணம் கட்டிப்போட்டு வருவார்கள். மூட்டைகள் தூக்கும் கூலிகள் , ர்pக்ஷோ இழுக்கும் தொழிலாளிகள், அரசாங்க ஊழியர்கள், கொம்பெனிகளில் வேலை செய்பவர்கள்  ஆகியோர் கூட பூக்கீசை தரிசிக்கப் போவது வழக்கம். அவ்வளவு படிப்பறிவு இல்லாத பல தொழிலாளுக்கு  ஆங்கிலம் வாசிக்கத் தெரியாவிட்டாலும் குதிரைகளினதும், ஜொக்கிமார்களுடைய ஆங்கிலப் பெயர்ளை நன்கு அறிந்து வைத்திருந்தார்கள்.

ஜோதிக்கு சூதாட்டத்திலும் , குடியிலும் தான் ஆர்வம். பெண்கள் விஷயத்தில் சற்று ஒதுக்கி நிற்பார். அவருடைய தந்தை சண்முகலிங்கமும் ஒரு சூதாட்டப் பிரியர். சண்முகலிங்கம் தன் சொத்தில் ;அரைவாசியை சூதாடியே அழித்தார். ஒரு காலத்தில் எப்போது குதிரைகள் ஓடிய விபரத்தை உள்ளடக்கிய புத்தகமும் கையுமாகவே இருப்பார். அதவே அவரது பைபிலாக இருந்தது.

ஜோதி கனடாவுக்கு குடும்பத்தோடு புலம்பெயர்ந்த பின்னர், குதிரைகள் மேல் பந்தயம் கட்டும் சந்தப்பம் அவருக்கு கிட்டவில்லை. காரணம் குதிரைகள் பந்தயத்துக்காக ஓடும் இடங்கள் மிகக் குறைவாக இருந்ததே. ஆனால் அதற்கு பதிலாக கிழமைக்கு இரு முறை 649 என்ற லொட்டரி சீட்டுகள் இழுக்கப்பட்டன. இந்த லொட்டரி டிக்கட்டில்; 1 முதல் 49 எண்களில் 6 எண்கள் தெரிந்தெடுக்கப்படவேண்டும். அதனால் அந்த லொட்டரிககு 649 என்ற பெயர் வந்தது. சரியாக ஆறு எண்களையும் தேர்ந்தெடுத்தால் வென்றவருக்குப் பல மில்லியன் டொலர்கள் முதற் பரிசாகக் கிடைக்கக கூடிய வாய்ப்பு உண்டு;. அப்படி ஒருவரும் லொட்டரி இழுவையின் போது வெல்லாவிட்டால் அப் பரிசுப் பணம் அடுத்த இழுவையில் சேர்த்துக் கொள்ளபடும். இதை “ஜக்பொட்” என்று பெயர் சூட்டி அழைத்தனர். பல தடவை ஒருவரும் சரியாக ஆறு எண்களைத் தெரிந்தெடுக்காவிடில், பரிசுத் தொகை பல மில்லியன்களைத் தாண்டிவிடும். அனேகமாக வயது வந்த கிழவன் கிழவி மார்களே சூதூட்டத்தில் ஈடுபட்டனர். கசினோவுக்குப்  போய் வருவது பெரும் பாலும் முதியொர்களே . ஜோதி ஒரு தடவை தனது முதியோர் சங்கத்தின் அங்கத்தினர்களோடு ஒரெல்லா என்ற இடத்தில் உள்ள கசினோவுக்கு போய்வந்தாh.; அவருக்கு அந்த சூதாட்டம் சுவர்சியமாக இருக்கவில்லை. அதற்குப் பதிலாக ஒவ்வொரு தடவையும் 649 லொட்டரி டிக்குட்டுகள் ஐந்தாவது வாங்குவார். அவரது வசதிகேற்ப அவர் வாழ்ந்த அப்பர்hட்மெண்ட்  கட்டிடத்துக்கு அருகாமையில் இருந்த பிலாசாவில் உள்ள கடையொன்றில்; 649 டிக்கட் லொட்டரி டிக்கட் வி;ற்கப்பட்டது. 649 லொட்டரியோடு அதிக விலையில் சூப்பர்; செவன் என்ற 1 முதல் 49 எண்களில் 7 எண்களைத் தெரிந்தெடுக்கும் லொட்டரியும் கிழமைக்கு ஒரு தடவை இழுக்கப்பட்டது. அதன் பரிசுத் தொகை 649 லொட்டரி பரிசுத் தொகையை விட அதிகம்.

கனடாவுக்கு வந்து சில மாதங்களில் இந்த லொட்டரிகளைப் பற்றி ஜோதி அறிந்து தன சூதாட்ட விளையாட்டைத் துவங்கினாh.; அவருக்கு அரசு கொடுத்த வெல்பயர் பணத்தில் குறைந்தது சிறு தொகையை லொட்டரிக்கு செலவு செய்தார். ஒரு தடவையாவது தனக்கு பல மில்லியன் டொலர்களாவது விழாதா என்ற நப்பாசை அவருக்கு இருந்தது. பல தடவை லொட்டரி எடுத்த ஜோதிக்கு இரு தடவைகள் 300 டொலர்களும், 250 டொலர்களும் மட்டுமே ஆறுதல் பரிசாகக் கிடைத்தது. அதுவே அவரைத் தொடர்ந்து 649 லொட்டரி டிக்கட்டுகள் வாங்கத் தூண்டியது. பரிசாகக் கிடைத்த பணத்தை விட ஜோதி லொட்டரி டிக்கட்டுகள் வாங்கச் செலவு செய்த பணம் பல மடங்கு அதிகம். அவர் மனைவியும் இரு பிள்ளைகளும் ஜோதியை லொட்டரி டிக்கட் வாங்குவதை நிறுத்தும்படி எவ்வளவோ சொல்லியும் அவர் செவியசாய்க்கவில்லை.

அந்க் கிழமையும் வழமை போல் ஜோதி பத்து 649 லொட்டரி டிக்கட்டுகளை  Nஐhதி வாங்கினார். லொட்டரி இழுக்கப்பட்ட அடுத்த நாள், ஜோதி கையில் விஸகி கிலாசும், வாயில் சிகரட்டோடும் ஹாலில் உள்ள சோபாவில் போய் அமர்ந்தார். அன்று அவருக்கு வயிற்றுக்குளப்ம வேறு. அதோடு இடது கையில் வலி. மூச்சுவிட அவருக்குச் சிரமமாக இருந்தது, இரு தினங்களுக்கு முன்னர் குடும்ப வைத்தியரிடம் போய் செக் அப் செய்த போது அவரது இரத்த அழுத்தம் அதிகமென்றும், இரத்தப் பரிசோதனையின் படி அவருக்கு சுகர் லெவலும் கொலஸ்டிரோலும் அதிகம் என்றும், சிகரட், விஸ்கி;  குடிப்பதையும்;, நிறுத்தும்படி ஜோதிக்கு டாக்டர் அறிவுரை சொன்னார். இந்த வயதில் ஹார்ட் அட்டாக் வரக் கூடியச் சாத்தியக்கூறுகள் அதிகம் என்றார் டாக்டர். இனிப்பான, கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்க்கச் சொன்னார்;. பல தடவை டாக்டர் இந்தப் புத்திமதிகளை ஜோதிக்கு சொல்லியும் அவர் அதைக் கேட்டப்பாடாக இல்லை.

நெஞ்சுவலி ஜோதிக்கு அடிக்கடி வந்து போனதும். அதைபற்றி அவர் கவலைபட்டதாக தெரியவில்லை. ஒரு கையில் வலி வேறு. இதையல்லாம் பற்றி கவலைப்படாமல்; தனக்குப் பரிசு வீழுந்திருக்கிறதா என்று தான் வாங்கிய பத்து லொட்டரி டிக்கட்டுகள்; ஒவ்வொன்றாக பத்திரிகையில் வெளிவந்த முதலாம் பரிசு பெற்ற எண்களோடு ஒப்பிட்டுப்பார்த்துக் கொண்டிருந்தார். முதலாம் பரிசு ஜக்பொட்டாக பத்து மில்லியன் டொலர்கள். இரண்;டாம் பரிசு இரண்டு மில்iலியன். பரிசு விபரம் பத்திரிகையில வந்திருந்து. முதல் ஐந்து டிக்கட்டுகளில தான தெரி;ந்தெடுத்த எண்களைப் பரிசு கிடைத்த எண்கiளோடு ஒப்பிடடுப்; பார்த்தாh ஜோதி.; ஒரு டிக்கட்டில் மாத்திரம் இரு எண்கள் சரியாக இருந்தது. மற்றைய நான்கு டிக்கட்டிகளிலும் பரிசு விழுந்து  ஒரு எண் சரி இருக்கவில்லை. தன் அதிர்ஸ்டத்தை நொந்த வாரே ஆறாவது டிக்கட்டைப்பார்த்தார்;. அதிலும் ஒரு எண்ணும்; விழவில்லை. ஆத்திரத்தில் ஒரு மிடக்கு விஸ்கியைக் குடித்தார்;. நெஞ்சுவலி அதிகரித்ததை அவர் கவனத்தில் எடுக்கவில்லை. அவரது சிந்தனை முழுவதும் லொட்டரி டிக்கட்டுகளிலேயே இருந்தது.  எட்டாவது, ஒன்பதாவது டிக்கட்டுகளைப் பாhத்தார். அந்த டிக்கட்டுகளிலும்; அவருக அதிhஷடம் கிட்டவில்லை.

“ அட சனியனே எண்டை கஸ்ட காலம் என்று தனக்குள் தன்னைத் தானே திட்டிக்கொண்டார். கடைசியாக பத்தாவது டிக்கட்டில் உள்ள எணகளை பத்திரிகையில் வந்த பரிசு பெற்ற எண்களோடு ஒப்பிட்ட பார்க்கத் தொடங்கினார்;. அவரது கண்கலால் தான் பார்ப்பதை நம்ப முடியவில்லை. நெஞ்சு வலி அதிகரித்து முச்சு விட அவருக்கு கஷ்டமாக இருந்ததை அவர் கவனத்தில எடுக்கவில்லை. நெஞ்சுக்குள்; குத்துவது போன்ற ஒரு வேதனை. முகம் எல்லாம் வியர்த்தது. கை வலி அதிகரித்தது. அவர் தெரிந்தெடுததத ஐந்து எண்கள் அவர் வாங்கிய பத்தாவது டிகட்டில் பரிசு பெற்;ற எண்களோடு பொருந்தின. ஆறாவது எண்ணைப அவர் பார்த்து  தனக்கு முதற் பரிசு விழுந்திருக்கிறதா என்று அறியமுன்னர் ஜோதி “ஐயோ அம்மா நெஞ்சு வலிக்குதே” என்ற பெரிய சத்தத்தோடு சோபாவில் சாய்ந்தார். அவரது குரல்  கேட்டு மனைவியும் இரு பிள்ளைகளும் ஹாலுக்குள் ஓடி வந்தனர். ஜோதிலிங்கத்தின் மகனுக்கு தன் தகபனுக்க என்ன நடந்து இருக்குகெமனப் புரிந்து கொள்ள அதிக நேரம் எடுக் வில்லை. சகோதரியை உடனே அம்புலன்சுக்கு போன் செயயச் சொன்னான்.

பத்து நிமிடங்களில அம்புலன்ஸ் வந்தது. ஆம்புலன்சில் வநத பராமெடிக்கிஸ் ஜோதியை உடனடியாக ஆஸ்பத்திரி எமர்ஜென்சிக்கு கொண்டு; சென்றார்கள். போகும் போது ஜோதிக்கு ஓரளவுக்கு சுயநினைவு இருந்தது. “என் டிக்கட். என் டிக்கட்”, என்று பிதட்டியபடியே அம்புலன்சில் சென்றார். தனக்கு வந்திருந்த ஆபத்தை அவர் உணரவில்லை.

                                                                                    ♣♣♣♣♣

“நல்ல நேரம் உங்கடை தந்தைக்கு ஹாhட் அட்டாக் வந்து அவர் உயிர் தப்பியதே அபூர்வம். பல பரிசோதனைகள் உடனடியாக செய்ய வேண்டு;ம். அவசியப்பட்டால் ஹாhட் சேர்ஜரி செய்யவேண்டியும் வரும். உம்முடைய சகோதரி சொன்னார் இவர் சிகரடடும்;, விஸ்கியும் தினமும் குடிப்பதாக. அது உண்மையா“? டாக்டர் ஜோதியின் மகனைக் கேட்டார். ஜோதியின் மகன் டாக்டருக்கு தந்தையைப்பற்ற்p முழு உண்மையையும்; சொன்னான் .

பரிசோதனைகள் செய்து மூன்று நாட்களுக்கு பி;ன்னர், வைத்தியர்கள் ஜோதிக்கு இருதயத்தில் மூன்று இரத்தக குழுhய்கள் தொன்னூற்றி ஐந்து விகிதம் இரத்தம் ஓட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது   ஓப்பன் ஹார்ட் சேர்ஜரி அவசியம் விரைவில் செய்தாகவேண்டும்; என முடிவெடுத்தனர்.. அதைப்பற்றி ஜோதி கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. அவர் சிந்தனைக்ள முழுவதும் தான் வாங்கிய பத்தாவது டிக்கட்டில் தான் தெரிந்தெடுத்த நம்பர்களில் ஐந்து சரியாக இருந்தது. ஆறாவது நம்பர் நிட்சயம் சரியாக இருந்திருக்கும். அதை நிட்சயப்படுத்த முன்பே  எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து எல்லாத்தையும் கெடுத்துவிட்டது”.. மகனிடம் சொல்லிக் கவலைப்பட்டார் ஜோதி.

“ அப்பா டிக்கட்டைப் பற்றி கவலைப் படாதீங்கள். உங்கள் உயிர் தப்பியதே உங்கள் அதிர்ஷடம். அதுவே போதும்;. வேறு அதிர்ஷ்டம் வேண்டாம் உங்களுக்கு” என்றான மகன். மகனின் பதில் ஜோதிக்கு திருப்தியைக் கொடுக்கவில்லை.

“ எண்டா தம்பி, மெசையில் நான் வைத்த டிக்கட்டுகளுக்கு என்ன நடந்தது? முதலாம் பரிசு கிடைக்க இருந்த நம்பர்களை கொண்ட டிக்கட்டும் மேசையில் வைத்திருந்தேன் அதைப் போய் எடுத்துவா”

“அப்பா உங்களுக்கு என்ன பயித்தியமே? மேசையில் இருந்த அந்த டிக்கட்டுகள் எல்லாவற்றையும் அம்மா இரண்டு நாற்களுக்கு முந்தியே, கூட்டி குப்பைக்குள்ளை போட்டிட்டா. குப்பையோடு குப்பையாய் குப்பை அள்ளுபவன் லொரியிலை  எப்பவோ கொண்டு போயிருப்பான். அந்த டிக்கட்டும் குப்பையோடு போய் இருக்கும் என்றான் மகன்.

“கைக்கு எட்டியது வாயுக்க எட்டவில்லையே. அந்த டிக்கட் மாத்திரம் இருந்தால் எனக்குப் பத்து மில்லியன் டொலர்கள் கிடைத்திருக்குமே. நான மில்லியனியராகி இருப்பேனே” என்று வாயுக்குள் முணுமுணுத்தார் ஜோதிலிங்கம்.

                                                                            ♣♣♣♣♣

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

“பார்வை” Copyright © 2016 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book