jaffna_kachari_newஆணாதிக்கம்

      ஓரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் ஒருத்தியிருப்பாள் என்பது உண்மை. மனைவி அமைவெதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். பெண்களின் புனிதத்தையும் திறமையைம் மதிக்காத  ஆண்கள் அனேகர். இந்தக் கதை அத்தகைய ஆண் ஒருவனைப்பற்றியது.

உதவி அரசாங்க அதிபர்  ( Assistant Government Agent) ராஜ் என்று அழைக்கப்படும் இராஜரத்தினம் தற்புகழ்ச்சியை விரும்புபவன். சுயநலவாதி. தனது அதிகாரிகளின் சொல்லுக்கு கீழபடிந்து நடந்து நற்பெயர் பெற்றவன். தனக்குக் கீழ்வேலை செய்பவர்களை துட்டாக மதிப்பவன். பெண்களை மதிக்காதவன். ஆவாகள் செய்யும் ஒவ்வொரு கரியத்திலும் பிழை கண்டுபிடிப்பதில் அவனுக்கு ஒரு திருப்தி. ராஜ் எதையும் திட்டமிட்டே செய்வான்.

அன்று யாழ்ப்பாணக் கச்சேரியில்  கொழும்பிலிருந்து வந்திருந்த உள்நாட்டு விவகார அமைச்சருக்கான கூட்டம்;.  மதிய போசனம் உற்பட கூட்டத்தை ஒழுங்கு செய்யும்  பொறுப்பை  இராஜரத்தினத்திடம் அரசாங்க அதிபர் கொடுத்திருந்தார். அந்தக் கூட்டத்தில் உதவி அரசாங்க அதிபர்களின பிரச்சனைகளையும் மக்களின் தேவைகனையும் கேட்டு தீர்த்து வைக்கவே  அமைச்சர் வந்திருந்தார். கூட்டத்தில் அமைச்சருக்கு அருகே தான் அமர்வதற்கு ஏற்றவாறு இருப்பிடங்களை ராஜ் ஒழுங்கு செய்திருந்தான். அமைச்சரோடு சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் உரையாடி, தனக்கு தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் சரளமாக உரையாட முடியும் என்பதை அமைச்சருக்கு காட்டினார். அமைச்சர் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு சிங்களத்தில் ராஜ் பதில சொன்னார். அவரது முக்கிய நோக்கம், சிஏஎஸ் எனப்படும் இலஙகை அரசின் பரிபாலன சேவையில் கிலாஸ் 1 க்கு பதவி உயர்வு பெற்று, இன்னும் சில மாதங்களில் அரசாஙக அதிபர் இளப்பாறிய பின்னர், தான் அந்த சீட்டைப் பிடிக்க வேண்டும் என்பதே.

“புளூரிப்பன்” ஹொட்டலில் அமைச்சருக்கு மதிய போசனத்தை ராஐ; ஒழுங்கு செய்திருந்தான். பல விதமான யாழ்ப்பாணத்து கறிகள், பழவகைகள் பரிமாறப்பட்டது. திருப்தி அடைந்த அமைச்சர் தனது உரையில் கூட்டத்தையும்,  போசனத்தையும் ஒழுங்கு செய்த ராஜை பாராட்டிப் பேசினார். எதை ராஜ் எதிர்பார்த்தானோ அது நடந்தது.

அரசாங்க கிலரிக்கல் சேர்விசில் இருபத்தி மூன்று வயதில் சாதாரண கிளார்க்காக வேலை செய்ய ஆரம்பித்து படிப்படியாக தன் உயர் அதிகரிகளுக்கு பந்தம் பிடித்து, விரைவாக பதவி உயர்வு பெற்றவன் ராஜ். சிங்களம் பேசவும் வாசிக்கவும் கற்றுக் கொண்டான். கொழும்பு, கண்டி, மாத்தறை ஆகிய இடங்களில் சில காலம் வேலை செய்தது, அவருக்கு சிங்களம் கற்க உதவியாக இருந்தது. எவருக்கு கீழ் வேலை செய்கிறாரோ அவர் சொல்வதறகெல்லாம் மறுக்காமல் ஆமோதிப்பதினால், “பந்தங்காரையா” (தீப்பந்தம் பிடிப்பவன்) என்று சக ஊழியர்கள் அவனைக் குறைவாகப் பேசினாலும், ராஜ் கவலைப்பட வில்லை. அவனுக்கு தன் காரியம் ஆனால் சரி.

யூனிவர்சிட்டியில் படித்து பட்டம் பெறும் வாய்ப்பு அவனுக்கு கிட்டவில்லை.  ஆனால் தான் அரச சேவையில் எப்படியும் உயர் பதவி வகிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவனிடம் இருந்தது. இருபத்தி மூன்று வயதில் கிலரிக்கல் சேர்விசில் சேர்நத ராஜ்,  முப்பது வயதில் சிஏ.எஸ் பரீட்சை எழுதி முதல் தடவையிலேயே சித்தியடைந்தான். ஆரம்பத்தில் கண்டி, மாத்தறை கச்சேரிகளிலிலும், திருகோணமலை கச்சேரியிலும்; உதவி அரசாங்க அதிபாராகவும் கடமையாற்றி, அமைச்சர் ஒருவரின் உதவியோடு யாழ்ப்பாணக் கச்சேரிக்கு  மாற்றலானான். யாழ்ப்பாண மாவடட்த்தில், நல்லூர், சாவகச்சேரி போன்ற இடங்களில் உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றி, இறுதியில் யாழ்ப்பாணக் கச்சேரியில் மேலதிக அரசாங்க அதிபரானான்.

ராஜின் தந்தை செல்வரத்தினம், யாழ்மத்திய கல்லூhரியில்  ஆசிரியராக வேலை செய்து இளப்பாறியவர். கோண்டாவிலைச் சேர்நத செல்வரத்தினம் தன் மனைவியோடு பிரச்சனைப்பட்ட வாழ்க்கையையே நடத்தியவர். அவரும் பெண்களை மதிக்காதவர். அவரது ஒரே மகன் இராஜரத்தினம். தந்தையைப் போல ஒரு சுயநலவாதி. அவனுக்கு தன் காரியம் நடந்தால் போதும். ராஜ் அரச பரிபாலன சேவையான சிஏஎஸ் பாஸ் செய்து அரசில் உயர் பதவி வகித்த போது அவனக்கு பல இடங்களில் இருந்து கலியாணம் பேசி வந்தது. கரம்பனைச் சேர்ந்த பெரிய பிஸ்னஸ்மன் தர்மலிங்கத்தின் ஒரே மகளான கொளரியை, கொழுத்த சீதனத்தோடு ராஜ் திருமணம் செய்தான். கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இரு வீடுகள், பளையில் பத்து ஏக்கரில் தென்னந்தோட்டம். அதை விட நகை நட்டு, பணம் வேண்டியளவு, தர்மலிங்கம் தன் ஒரே மகளுக்கு  சீதனமாகக் கொடுத்தார். சீதனப் பணம் ஐந்துலட்சத்தில் இரண்டு இலட்சம் செல்வரத்தினத்துக்கு  டொனேசனாக கொடுத்த பி;ன்னரே செல்வா தன் மகனின்  திருமணத்துக்கு சம்மதித்தார்.

“ஏன் ஐயா மகனின் கலியானத்துக்கு டொனேஷன கேட்கிறீர். ஊமக்கு இருப்புது ஒரே மகன். பெண் பிள்ளைகள் கூட இல்லை அவர்களுக்கு சீதனம் கொடுக்க” என்று கல்யாணத் தரகர் தம்பிப்பிள்ளை கேட்டதுக்கு.

“இது என்ன கேள்வி. ஆவன் ராஜை வளர்த்து, படிப்பித்து ஆளாக்கிய நான் செய்த செலவைப் பற்றி யோசித்தனீரே? அதை திரும்பிப் பெற இதைவிடச் சநதர்பம் எனக்கு வராது”, என்றார் செல்வரத்தினம். அவர் பண ஆசை பிடித்தவர் என்பது தரகருக்குத் தெரியும்.

                                                                         ♣♣♣♣♣

கொளரி, கொழும்பு லேடீஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வி படித்தவள். அடக்கமானவள். படிப்பில் கெட்டிக்காரி. கொழும்பு யூனிவர்சிட்டிக்குப் போய் அறிவியலில் முதன்மையாக பட்டம் பெற்றவள். படிப்பைத் தொடாந்து பொளதிகத்தில் பி.எச் டி பட்டம் பெறவேண்டும் என்பதே அவள் ஆசை. தர்மலிங்கம் அடிக்கடி சுகயீனப்படுவதால், தனக்கு ஏதும் நடக்க முன்பே மகளுக்குத் திருமணம் செய்து வைத்hhர்.

“ நீ கலியாணம் செய்த பிறகு உன்றை கணவனின் அனுமதியோடு படிப்பைத் தொடரலாம. ஏனக்கு ஆட்சேபனையில்லை” , என்றார் தர்மலிங்கம்.

சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் கௌரி பௌதிக ஆசிரியையாக வேலை செய்யத் தொடங்கினாள். அவள் படிப்பித்த ஏலெவல் மாணவிகள் ஒருவராவது பொளதிகத்தில சித்தியடையாமல் போனதில்லை. யாழப்பாணத்தில,; கொளரி பிரபல்ய பௌதிக ஆசிரியை என்று பெயர் பெற்றது ராஜுக்கு அவ்வளவுக்கு திருப்தியில்லை. அதோடு ராஜரத்தினத்துக்கு தன் மனைவி வேலைக்குப் போவது மனதுக்கு அவ்வளவு வெறுபபைகட கொடுத்தது. “அவள் வேலை செய்வதால் குடும்பத்துக்கு வருமானம் அதிகரிக்கும். அதோடு கொளரி படித்த படிப்பு வீணாகப் போகக் கூடாது” என தன் தாய் ருக்குமணியின்; கட்டாயத்தினால் கொளரி வேலை செய்வதற்கு ராஐ; சம்மதித்தான்.

வீட்டில் சமைக்கும் உணவு தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பது ராஜின் கட்டளை. கௌரி தன் இஷ்டத்துக்கு சமைக்க முடியாது. தினமும் கறிகள் கூட தன்னைக் கேட்டுத் தான் கொளரி செய்யவேண்டும். வீட்டில் உள்ள ஜன்னல திரைச்சேலை முதற்கொண்டு கதிரை, மேசை சோபா, கட்டில் வரை அவன் தோந்தெடுத்தாக இருந்தது. கொளரியின்  கருத்துக்கு ஒருநாளும் ராஜ் மதிப்பு கொடுத்ததில்லை. வங்கிக் கணக்கு இருவர் பேயரில் இருந்தாலும் செக் புத்தகத்தைத் தான் வைத்துக்கொண்டான்.

கொளரியிடம் பிசிக்ஸ் டியூசனுக்காக மூன்று மாணவிகள் வீட்டுக்கு வருவதை ராஜ் அவ்வளவாக விரும்பவில்லை. கௌரி தேர்ந்தெடுத்த கேள்விகள,; இறுதி ஏலெவல் பரீட்சைக்கு அனேகமாக வருவதினால் மாணவிகளிடையே அவளுக்கு ஒரு தனி மதிப்பிருந்தது. மற்றைய கல்லூரிகளில படிக்கும் மாணவ மாணவிகள் கூட அவளிடம் டியூசன் கேடடுட வந்தாலும் அவள் அவர்களை ஏற்றுக்கொள்வில்லை. மாணவ மாணவிகள் வீட்டுக்கு வருவதும் , அவர்களின் பெற்றோர்கள கொளரி படிப்பிக்கும் முறையைப் பராட்டுவதும் ராஜுவின்; மனதில் பொறாமையைக் கொடுத்தது. ஒரு சமயம் அரசாங்க அதிபர் கூட கொளரியிடம் பிசிக்ஸ் படிக்கும் தன மகள்  கொளரி படிப்பிக்கும் முறை இலகுவாகவும், விளங்;கக்கூடியதாகவும் இருப்பதாகத் தனக்குச் சொல்லி கௌரியை பராட்டியது ராஜுக்கு எரிச்சலைக் கொடுத்தது. வேலை செய்யும் இடத்தில் பலருக்கு ராஜின் போக்கு பிடிக்கவில்லை. அவனுக்கு கீழ மூன்று பெண்கள் வேலை செய்தார்கள். அவர்களை ராஜ் வேறுபாடு காட்டி நடத்தினான். அவர்களை நடத்தும் விதம் சக ஊழியர்களுக்கு ராஜமேல் வெறுப்பைக் கொடுத்தது.

வேலை செய்த மூன்று பெண்களில் ஒருத்தியான டைபிஸ்ட வனிதா, பத்து வருடங்கள் டைபிஸ்ட்டாக வேலை செய்தவள். வனிதா சுருக்கெழுத்தும் தெரிந்தவள். ஆனால் ராஜுவுக்கு அவள் வேலையில திருப்தியில்லை. ஒருநாள வனிதா ஆங்கிலத்தில் டைப் செய்த  முக்கிய கடிதத்தில் பல எழுத்துப் பிழைகள் இருப்பதை கண்ட ராஜ், அவளைப் பற்றி அரசாஙக அதிபருக்கு முறையிட்டு, யாழப்பாணக் கச்சேரியில் இருந்து வவுனியா கச்சேரிக்கு  வனிதாவை மாற்றம் செய்தான். நல்லூரில் குடும்பத்தோடு வாழ்ந்து வந்த வனிதாவுக்கு, அந்த மாற்றம் அசௌகரியததைக் கொடுத்தது. வனிதாவின் கணவனும் யாழ்ப்பாண மாநகரசபையில் வேலை செய்பவன். ராஜிடம் தன் மாற்றத்தை ரத்து செய்யும்படி எவ்வனவு கெஞ்சிக் கேட்டும் ராஜ் சம்மதிக்கவில்லை. அரசாங்க அதிபரிடம் வனிதா முறையிட்டும், ஒன்றும் நடக்கவில்லை.

ராஜ் – கௌரி தம்பதிகளுக்கு திருமணமாகி இரண்டு வருடத்தில் மாலதி பிறந்தாள். தன் குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்த ராஜுவுக்கு மாலதி பிறந்தது பெரும்  ஏமாற்றத்தைக் கொடுத்தது. தன்னையறியாமலே ஆரம்பத்திலிருந்தே மகள் மாலதியை வெறுக்கத் தொடங்கினான். தன் தாயை ஒரு வேலைக்காரி போல் தந்தை நடத்துவதைக்கண்ட மாலதி, தந்தெயோடு பல தடவை வாக்குவாதப்பட்டிருக்கிறாள். தாயைப் போல் மாலதி படிப்பில கெட்டிக்காரி, ஆனால் பிடிவாதக்காரி.

“மாமி. இவர் என்னோடு எப்போதும் சணடைபோடுவதை மாலதி அவதானித்து வாராள். ஆதனாலை ஏன் அம்மா அப்பா உங்களோடை எப்பவும் குறைபிடித்து சண்டை போடுகிறார். நீங்கள் அவரை விட கூட படித்தவள் என்ற பொறாமையா? என்னிலையும்; அவருக்கு விருப்பமில்லை? அவருக்கு பெண்களைப் பிடிக்காதா? என்று கேட்டிருக்கிறாள்.” என்றாள் மாமியாரிடம் கௌரி.

“இங்கை பார் கௌரி. குடும்பத்திலை கணவன் மனைவிக்கிடையே சண்டைச் சச்சரவு வருவது சகஜம். உங்கள் விசயத்தில மாலதியை தலையிடவேண்டாம் என்று சொல்லிவை, என்று கௌரியின் மாமியாh ருக்மணி; அவளுக்கு அறிவுரை சொன்னாள். ருக்மணிக்கு தன் பேத்தி மாலதியின் குணம் தெரியும்.

சில நாட்களாக மாலதி ஸ்கூல்; முடிந்து வீட்டுக்கு தாமதித்து வரத் தொடங்கினாள். ராஜ் அதைபற்றி மகளிடம் விசாரிக்கவில்லை. கொளரிக்கும,; ராஜின் தாயுக்கும்  மாலதி தாமதமாக வருவதைப் பற்றி; கவலை. மகளை தாமதித்து வருவதைக் கண்டிக்கும்படி கொளரி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராஜ் கேட்கவில்லை.

“உவள் அப்படி என்ன படித்து கிழித்து விடப்போகிறாள். நேரத்தோடை கலியாணத்தை செய்து வைப்போம்;. அப்போ எங்களுக்கும் பிரச்சனை தீர்ந்த மாதிரி” என்றான் ராஜ்.

கொளிக்கு கணவனின் பதில் வெறுபபைக் கொடுத்தது. தன் மகளின் கெட்டித்தனம் அவளுக்கு தெரியும்.

“ஏன் மாலதி இப்ப சில நாட்களாக ஸ்கூல் முடிந்து தாமதித்து வருகிறாய்” என்று ஒரு நாள் கொளரி மாலதியைக் கேட்டதுக்கு, தன் வகுப்பு மாணவிகளுக்கு கணித பாடத்தில் உதவிசெய்வதாக விளக்கம் கொடுத்தாள். தீடீரென ஒரு நாள் மாலதி ஸ்கூலில இருந்து வரவேயில்லை. கொளரிக்கும் மாமியாருக்கும் என்ன செய்வதென்று தெரியவிலலை. மகளை காணவில்லை என்று ராஜ் கவலைப்படவில்லை.

“ என்ன தம்பி, மாலதி விடுதலைப் புலிகளின் இயக்கத்தில சேர்ந்துவிட்டதாக பக்கத்து வீட்டு இந்திரன் சொல்லிக் கேள்விப்பட்டேன். இந்திரனுக்கு இயக்கத்திலை பல பெடியன்களைத் தெரியும். அவள் இயக்கத்தில் சோந்தது உனக்குத் தெரியுமா?, விதானையாரின் மனைவி ராஜைக் கேட்டாள். அவளுக்கு ஊரில் நடக்கும் விஷயங்கள் எல்லாம் தெரியும்.

“மாமி. அவள் விருப்பப்படி இயக்கத்தில சேர்ந்து விட்டாள். அதுக்கு நான் என்ன செய்யமுடியும்? ஒரு சனியன் தொலந்தது என்று இருக்கட்டும். என் சொல்லை அவள் ஒரு நாளும் கேட்பதில்லை. எப்போதும் தாய் சொன்னபடிதான் நடப்பாள்.” என்றான் ராஜ் கோபத்தோடு, தான் அதைப்hற்றிக் கவலைப்பட்டதாகக் காட்டிக் கொள்ளாமல்.

விதானையார் மனைவி, மாலதியைப் பற்றிய நியூஸ் சொல்லி அடுத்த நாள், “அத்தான் இந்த கடிதத்ததை பார்த்தீர்களா. ஒரு பெடியன் உங்களிடம் கொடுக்கச் சொல்லி தந்துவிட்டுப் போனவன்.”

“கடிதமா? எங்கை வாசி.”கௌரி கடிதத்தை வாசிக்கத் தொடங்கினாள்

அன்பின் அப்பா, அம்மா, அப்பம்மாவுக்கு..

எனக்கு தெரியும் நான் உங்களைவிட்டுப் பிரிய எடுக்கும் முடிவை கேள்விபட்டு நீஙகள் பெரும் கவலைப்படுவீர்கள் என்று. இந்த முடிவை நான் எடுப்பதுக்கு முக்கிய காரணம், அப்பா அம்மாவை வேலைக்காரி போல நடத்தும் விதம். அப்பா ஒரு பழமைவதி. ஆண் ஆதிக்க மனப்பான்மை உள்ளவர். மனைவிக்கு தகுந்த இடம் அடுப்படி என்பதே அவர் எண்ணம். நான் அவர் குணத்தை மாற்றச் சொல்லி எவ்வளவோ கேட்டும் அவர் மாறவில்லை. அது அவரின் பிறவிக் குணம். அப்பப்பாவும் அவரைப் போலவே அப்பம்மாவை நடத்தியவர் என்று அப்பம்மா சொல்லிக் கேள்விப்பட்டேன். நான் இயக்கத்தில் சேர வேண்டிய முக்கிய நோக்கம் பெண்களும் ஆண்கனைப் போன்று எதையும் சாதிக்க கூடியவர்கள் என்பதை அப்பாவுக்கு நிரூபித்துக் காட்ட. இயக்கத்தில் ஆண் பெண் என்ற வேறபாடு கிடையாது. இயக்கத்தில் எனது சினேகிதி சங்கரி சேர்ந்ததைப் போல் சேர்ந்து, தமிழ் இனத்தின் விடுதலைக்கு, பெண்களின் பங்கில் நானும் ஒருத்தியாக இருக்க முடிவெடுத்தேன். சமூகத்தில நிலவும் பழமையையும் ,மூடநம்பிக்கைகளையும் களைத்தெறிந்து தமிழ் இனத்தின் விடுதலைக்காக உழைப்பேன். மாலதி என்ற பெயருள்ள ஒரு மகள் இருந்தாள் என்பதை மறந்துவிடுங்கள். நான் எல்லாப் பெண்களைப் போல் பிள்ளைகள் பெறும் இயந்திரமாக இருக்க விருப்பப்படவில்லை. சமூகத்துக்கு சேவை செய்வதே எனது குறிக்கோள்.

நன்றி

மாலதி

கடிதத்தில் தன் ஒரே பேத்தி எழுதியருந்ததை ராஜின் தாய் கெட்டதும். தலைசுற்றி கிழே விழுந்தாள். ராஜ், கௌரி இருவரும் சோந்து அவளை தூக்கிப்போய் கட்டிலில் கிடத்தினார்கள. சில நிமிடங்களுக்கு பின்னர் ராஜின் தாய் ருக்மணி கண்வழித்தபோது மகனும், மருமகளும் அருகே நிற்பதைக் கண்டாள். ராஜை தன் அருகே அழைத்து”  இப்போ நடந்ததைப் பார். இதுக்கெல்லாம் நீதான் காரணம். நீ கௌரியை நடத்தும் விதம் மாலதியின் மனதைப் புண்படுத்திவிட்டது. அது தான் அவள் இயக்கத்தில் சேர்ந்துவிட்டாள். இனியாவது உன் போக்கை மாற்று” என்றாள் கவலையோடு ராஜின் தாய். கேளரி மௌனமாக நின்றாள்.

“ உங்கள இரண்டு பேருக்கும் மாலதியின் போக்கு தெரியும். அவளுக்கு இயக்கத்தோடு தொடர்பு இருந்ததாக எனக்கு சொல்லியிருந்தால், நான் அவளை கொழும்பில் உள்ள ஸ்கூலில ஒன்றில் சேர்த்து, போர்டிங்கில் போட்டிருப்பேன். இந்த சூழ்நிலையில இருந்து விடுபட்டிருப்பாள்”, ராஜ் தன் தாயின் மீதும் மனைவி மீதும் குற்றம் சுமத்தினான்.

சில வாரங்கள் உருண்டோடின. மாலதியிடம் இருந்து ஒரு தகவல்களும் வரவிலலை. மாலதியைப பிரிந்த கவலை கௌரியையும் அவள் மாமியரையும் வாட்டியது. ஒரு நாள் காலை, ராஜ் தனக்கு கீழ் வேலை செய்பவர்களோடு ஒரு மிட்டிங்கில் இருந்த சமயம், அரசாங்க அதிபர் பிரத்தியேக செயலாளாளர் ஒரு செய்தியோடு வந்தார்.

“சேர்  ஜி.ஏ உங்களை உடனடியாகப் பார்க்க வேண்டுமாம். தன் அறைக்கு வரட்டாம்”. செய்தியை ராஜுக்கு அறிவித்துப்போட்டு பதிலுக்கு காத்திராமல போய்விட்டார். ஜி.ஏ ஏன் தனை கூப்பிடுகிறார் என்பது ராஜுக்கு விளங்கவில்லை. மீட்டிங்கை ஒத்திவைத்துப்போட்டு அவசரம் அவசரமாக ஜி.ஏ யின் அறைக்கு ராஜ் போனான்.

அறைக்குள் ஜி.ஏயைத் தவிர இன்னும் இருவர் இருநதனர். ஒருவர் யாழ்ப்பாண மாவடத்தின் டி.ஐ.ஜி. மற்றவர் பிரிக்கேடியர். அவர்கள் இருவரையும் ராஜ் முன்பே சந்தித்திருக்கிறான்.

“ராஜ் உமக்கு ஹோம் மினிஸ்டிரி செயலாளரிடம்; இருந்து கடிதம் ஒன்று வந்;திருக்கிறது. பாதுகாப்பு கருதி உம்மை தற்காலிகமாக வேலையில் இருந்து நிறுத்தி வைக்கும்படியும், வேலையில் இல்லாத காலத்தில அரைமாதம் சம்பளம் கொடுக்கும் படியும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. செயலாளர் தன் கையொபமிட்டு கடிதத்தை அனுப்பியுள்ளார்.” என்று கடிதத்தை ஜி.ஏ ராஜிடம் கொடுத்தார்.

“என்ன சேர் சொல்லுறியள்? ஏதறகாக என்னை தற்காலிகமாக வேலையில் இருந்து நிறுத்தவேண்டும்?. நான அப்படி என்ன தவறு செய்தேன்? ராஜ் பதட்டத்தோடு அரசாங்க அதிபரைக் கேட்டான்.

“உம்மை வேலையில் இருந்து தறகாலிகமாக வேலையில் இருநது நிறுத்தும் கடிதம் என்கையில் கிடைத்தவுடன், நான், செயலாளரோடு கதைச்சனான். உமது மகள் இயக்கத்தில் சேர்ந்துவிட்டதாகவும. அது உமக்கு தெரிந்திருந்தும் நீh ஒபீசுக்கு அறிவிக்கவில்லை என்றும் நீர் தொடர்நது வேலை செய்வது ஆபத்து என்று ஒரு பெட்டிசன் வந்ததாகவும். அதைத் தீர விசாரித்த பின்னரே அமைச்சரின் அனுமதியோடு இந்த நடவடிக்கையைத் தான் எடுத்தாகச் சொன்னார். அது சரி ஏன் நீர் உமது மகள் இயக்கத்திலை சேர்ந்ததை பற்றி எனக்கு முன்பே அறிவிக்க வில்லை”? ஜிஏ கேட்டார்.

“சேர் என மகள் இயக்கத்தில் சேர்ந்து பல வாரங்களாகிவிட்டது. அவளைக் குடும்பத்தில் இருந்து ஒதுக்கி வைத்துப்போட்டேன். எனக்கும் அவளுக்கும ஒரு தொடர்பும் இல்லை.” என்றான ராஜ்.

“தொடர்பு இருக்கிறதோ, இல்லையோ பாதுகாப்பு கருதி எனக்கு உடனடியாக நீh  எனக்கு அறிவிக்கத் தவறிவிட்டீர். அதுவே உம்மை வேலையில இருந்து தற்காலிகமாக நிறுத்த வேண்டி வந்து. இன்னுமொன்று சொல்ல வேண்டும். நீர் இருக்கும் ஊரை விட்டு வேறு ஊருக்கு பொலீசின் அனுமதியின்றி போகக் கூடாது. தினமும் யாழ்ப்பாண பொலீஸ் ஸ்டேசனுக்கு போய் உம்மை அடையாளம் காட்டி கையொப்பமிட வேண்டும். இது முக்கியம. பொலீஸ் டிஐஜி அதற்கான ஓழுங்குகளைச் செய்துள்ளார்”, என்றார் அரசாஙக் அதிபர் கடுமை நிறைந்த தொனியில்;.  அறைக்குள் இருந்த டிஐஜியும், பிரிக்கேடியரும் ஜிஏ சொல்வதை ஆமோதித்து சரியென தலையாட்டினார்.

மாலதி இயக்கத்தில சேர்ந்;தது தன்னைப் பாதிக்கும் என்று ராஜ் எதிர்பார்க்கவில்லை. தனது பல கால அரசசேவையில தனக்கு ஏற்பட்டமு அழிக்க முடியாத களங்கம் என்றது அவர் மனம். பெட்டிசன் போட்டது வேற எவருமாயிருக்காது. இது நான் டிரான்ஸ்பர் செய்த டைபிஸ்ட் வனிதாவின் வேலைதான். எனக்கு எதிராகப் பேட்டிசன் போட்டு பழிக்குப் பழி வாங்கிவிட்டாள். பாவி. ராஜ் மனதுக்குள் கறுவிக் கொண்டான்.

“ ராஜ் உமது பைல்களையும் ஒபீஸ் சாவிகளையும் உமக்கு அடுத்த சீனியரான உதவி அரச அதிபர் ஆனாந்தனிடம் கொடும். நான் ஏற்கனவே அவருக்கு சொல்லிவிட்டேன்.” என்றார் ஜிஏ.

ராஜாவால் பதில் ஏதும் சொல்லமுடியவில்லை. கடிதத்தோடு குனிந்த தலையோடு ஜிஏயின் அறையைவிட்டு வெளியேறினான்.

********

ராஜா கவலை தோயந்த முகத்தோடு, நேரத்தோடு வீடு திரும்பியது, கௌரிக்கு கணவனுக்கு ஏதோ ஒபீசில் ஏதோ நடக்கக் கூடாதத: நடந்து விட்டது எனபதை புரிந்து கொள்ள அதிக நேரம் எடுக்கவில்லை. கவலையோடு கதிரையில் தலையில கைவைத்தபடி அமர்நத கணவனைப் பார்த்து “அத்தான் கலைத்தப்போயிருக்கிறியள் கோப்பி கொண்டுவாரன் என்று சமையலறைக்குப்;  போனாள். ராஜின் தாயுக்கு மகன் பேசாமல் இருப்பது விசனத்தைக் கொடுத்;தது. வழமையாக வீட்டுக்குள் வந்ததும் கௌரியோடு சண்டை ஆரம்பிப்பவன் அன்று வித்தியாசமாக, அமைதியாக இருக்கும் காரணம் அவளுக்கு புரியவிலலை.

கௌரி கோப்பியைக் கொண்டு வநது ராஜிடம் நீட்டினாள். நடுங்கும் கரத்தோடை கோப்பியை வாங்கினான் ராஜ். அவன் கண்களில இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது. கௌரியும், ராஜின் தாயும் அதை எதிர்பாhக்க விலலை. ஒருபோதும ராஜ் அழுதது கிடையாது. என்னைத் தான பல தடவை அழவைத்திருக்கிறார். இன்று ஏன இவர் கண்களில கண்ணீர். மாலதிக்கு எதும் நடக்கக் கூடாதது நடந்துவிட்டதா?, கௌரிக்குப் பல யோசனைகள்.

“கொளரி. என்னை தற்காலிகமாக வேலையில் இருந்து நிறுத்திவிட்டாங்கள். அமைச்சு செயலாளரிடம் இருந்து எனக்கு கடிதம் வந்திருக்கு. வேலை இருந்து நிற்கும் காலத்தில் இனி அரைமாதச் சம்பளம் தான் எனககு. அது மட்டுமல்ல நான் பெலசிலை போய் தினமம் ரிப்போhட் பண்ணவேண்டுமாம”, என்று  சொல்லியபடி கடிதத்தை மனைவியிடம் கொடுத்தான் ராஜ்.

கொளரி அமைதியாக கடிதத்தை வாங்கி வாசித்தாள். ” வேலையில் இருநது உஙகளை நிறுத்துவதற்கு அப்படி நீங்கள்  என்ன தவறு செயதீர்கள்”, கௌரி கவலை யோடுகேட்டாள்.

தன்னை வேலையிலிருந்து தற்காலிகமாக நிறுத்திய காரணம் முழுவதையும் கௌரிக்கு ராஜ் எடுத்துச் சொன்னான்.

“அத்தான். அப்பவே நான் யோசித்தனான். மாலதி இயக்கத்தில் சேர்ந்ததையும், அதற்கு நீங்கள் பொறுப்பில்லை என்பதையும் ஜிஏயுக்கு அறிவிக்க வேண்டாமா என்று உங்களுக்கு சொல்ல. ஆனால் நீஙகள் நான் சொல்வது எதைக் கேட்டு நடந்தியள்”?

“கொளரி நீh சொல்வது உண்மை. நான் உம்மையும் மாலதியையும் நடத்தின விதம் தான் எனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறதுக்கு காரணம். அதுக்காக உம்மிடம் மன்னிப்பு கேட்கிறன். இனி வீடு நடத்துவது உமது பொறுப்பு நான் எதிலும் தலையிடமாட்டேன். வீட்ட வரவு செலவைக் கவனிப்பதும் உமது பொறுப்பு. இதோ செக் புத்தகம். நீர் இனி செக்கில் கையெழுத்தடும். மாலதி எப்படியும் எங்களிடம் இயக்கத்தை விட்டுத் திரும்பி வீட்டுக்கு வர என்னால் முடிந்ததை செய்யப் பார்க்கிறேன்.” அமைதியாக மனைவியடம் ராஜ் மன்னிப்பு கேட்டான். ராஜின் தாயால் தன மகனிடம் ஏறபட்ட திடீர் மாற்றத்தை நம்பமுடியவில்லை. தனக்குள் சிரித்துக்கொண்டாள்.

“அத்தான் வருமானத்தைப் பற்றி யோசியாதையுங்கோ. இன்னும் சில மாணவிகள் என்னிடம் டியூசன் தரச் சொல்லிக் கேட்டவர்கள். அவர்களுக்கும் டியூசன் கொடுக்கிறன், நீங்கள் சம்மதித்தால்.”

“இனி உமது விருப்பத்துக்கு எதிராக நான் ஒன்றும் சொல்லமாட்டேன். எத்தனை பிள்ளைகள் எண்டாலும் நீh டியூசன் கொடும். அனால் உமது உடம்பைக் கவனித்துக் கொள்ளும்” என்றான் மனைவியிடம் என்றுமில்லாதவாறு அன்பாகவும், அக்கரையோடும், ராஜரத்தினம். கணவனில் தோன்றிய மாற்றத்தை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.  கொளரி தன் மனதுக்குள் மாலதிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டாள்.

                  ♣♣♣♣♣

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

“பார்வை” Copyright © 2016 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book