Nicon Canera1                                                                                 

                                                           

பார்வை  

அறைச் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கலெண்டரில் உள்ள படத்தைக் கண்வெட்டாமல் உற்றுநோக்கியபடி நித்தியானந்தன் கதிரையில் அமர்ந்திருந்தான். பிரபல்யமான கலெண்டர் பதிப்பகத்துக்காக அவன் எடுத்த படம் அது. வழமையில் கலெண்டருக்கு அரை நிர்வாணத் தோற்றத்தோடு, பால் உணர்வைத் தூண்டக் கூடிய  வெளிநாட்டுப் பெண் மொடல்கள் தான் தோற்றமளிப்பார்கள். ஆனால் அவன் உற்று நோக்கியது சற்று வித்தியாசமான, சேலை அணிந்த, ஒரு தமிழ் பெண்னின் படம்.   முத்துச் சிரிப்பழகி என்று பார்த்தவர்கள் விமர்சிக்கும் அளவுக்கு அவள் தன் பல்வரிசை முழுவதையும் தன் சிரிப்பில் காட்டியபடி தோற்றமளித்தாள். அந்த படத்தை எடுத்த  போட்டோகிராபர்; நித்தியானந்தன் பெயரை ஊரில் அறியாதவர்கள் இல்லை. அவன் எடுக்கும் படங்களைச் சற்று உற்று நோக்கினால் அதில் ஒரு தத்தவமே அடங்கியிருக்கும்.

“நித்தி” என்று அவனை சுருக்கமாக அவன் நண்பர்கள் அழைப்பார்கள். அவனது “நித்தி ஸ்டுடியோவில்” அவன் எடுத்த படங்களைப் பார்த்து இரசிப்பதற்காக தினமும் ஒரு கூட்டம் இருக்கும். ஆண்களினதும், பெண்களினதும் பல் வேறு தோற்றங்களையும், முகபாவனைகளையும் தவிர பறவைகள், மிருகங்கள் , இயற்கைக் காட்சிகள் கூட அவன் எடுத்த படங்களில் காணலாம்; நித்தியானந்தன் இயற்கையில் மயில் தோகை விரித்தாடும்போது எடுத்த படமும், நாக பாம்பு படம் எடுததுத ஆடும் போது தனது கெமராவில் கிளிக் செய்து எடுத்த படங்களைக் கண்ட நஷனல் ஜியோகிரபிக் (National Geographic) மாதாந்த சஞ்சிகையின் வரும் படங்களுக்குப் பொறுப்பான மைக் தொம்சன் என்பவர் அவ்விரு படங்களால் கவரப்பட்டு நித்தியானந்தத்தோடு தொடர்பு கொண்டார். அந்த தொடர்பினால் உலகில் பரபல்யமான சஞ்சிகைக்குhப் படம் எடுப்பதற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டான் நித்தி.

கலெண்டருக்காக அவன் எடுத்த முத்துப் பல் வரிசைக்காரி ஒருத்தியின் படம், தற்செயலாக முருகன் கோவில் வாசலில் ஒரு வருடத்துக்கு முன்பு அவன் எடுத்த படம். அப்பெண்ணின் பெயர் முத்தழகி என்று அவனுக்கு ஞாபகத்தில் இருந்தது. அவனுக்கு வெளிநாட்டுக் கலெண்டர் பதிப்பகத்தில் இருந்து அந்தப் படத்துக்காக கிடைத்த பெரும் தொனையின் ஒரு பகுதியை ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த முத்தழகிக்குக் கொடுத்ததை அவன் மறக்கவில்லை. திரும்பவும், வேறு கோணத்தில் வைத்துப் படம் எடுக்க கோவில் வீதிக்கு அவளைத் தேடி போனான் நித்தி. ஆனால்  அவளைக் காணமுடியவில்லை.

வீதியில் பூமாலை கடை வைத்திருக்கும் கடைக்காரர் ஒருவரிடம்; அவளைப் பற்றி நித்தி விசாரித்தான்.

“ஐயா என் பெயர் நித்தியானந்ந்தன். பல மாதங்களுக்கு முன் இக்கோவில் வீதியில் பூ விற்றுக் கொண்டு இருந்தாளே ஒரு பெண், அவள் இப்போ எங்கே என்று உங்களுக்குத் தெரியமா”? நித்தி கடைக்காரரைக் கேட்டான்.

“யார் முத்தழகியையா கேட்கிறீர்கள்?. “

“ஆமாம் அவளே தான் ஐயா”

கடைக்காரர் சிரித்தார்.

“ஏன் ஐயா சிரிக்கிறீர்கள்?”, நித்தி அவரைக் கேட்டான்.

“தம்பி நீர் அந்த ஏழைப் பெண்ணுக்கு ஒரு பெரும் உதவி செய்திருக்கிறீர் அவளது படத்தை கலண்டரில் பார்த்த ஒரு சினிமாக்காரர். தேடி வந்து அவளை சினிமாவில் நடிக்கக் கூட்டிப் போய் விட்டார். அவள் இப்போ வசதி உள்ள சினிமா நடிகை” என்றார் கடைக்காரன்.

நித்தியால் அவர் சொன்னதை நம்ப முடியவில்லை.

                                                              ♣♣♣♣♣

நித்தியானந்தனுக்கு பத்து வயதாக இருக்கும் போது, அவனுடைய தாய்மாமன், அவனது பிறந்த நாளுக்குப் பரிசாக வாங்கிக் கொடுத்த பிரவுனி 127 கொடெக் பெட்டிக் கெமராவே அவனது புகைப்படம் எடுக்கும் கலைக்கு வித்திட்டது. பெட்டிக் கெமராவை 1888ஆம் ஆண்டு உலகுக்கு அறிமுகம் செய்தது கொடெக் கொம்பெனி.  அக் கெமாராப் பாவிக்கும் விதத்தை நித்தியானந்தனுக்கு மாமன் விளக்கினார்;

கொடெக் பெட்டி கெமராவில் நித்தி  எடுத்த முதற்படம் இன்றோ நாளையோ தன் வாழ்வு முடியப்போகிறது என்று சிந்தித்தபடி மரம் ஒன்றின் கீழ் ஒரு  பொக்கவாய் குழந்தையோடு அமர்ந்திருந்த ஒரு பொக்கவாய் கிழவியின் படம். அந்தப்படத்துக்கு அவன் கொடுத்த தலைப்பு “இளமையும் முதுமையும்”. ஐந்து வருடங்களுக்கு முன் மரணித்த நித்தியின் பங்கஜம் பாட்டியின் தோற்றத்தோடு அந்தக் கிழவியின் தோற்றம் இருந்ததே அக் கிழவியின் உருவத்தை தன் கெமராவுக்குள் நித்தி அடக்கக் காரணமாகயிருந்தது. பங்கஜம் பாட்டி நிண்ட ஆயுளோடு வாழ்ந்து, தொன்னூற்றி; எட்டு வயதில் மரணித்தவள். நித்திமேல, அவள் தாயை விட அளவுகடந்த அன்பு வைத்திருந்தவள்.

கைநிறைய வலையல்கள். மூக்கில் பெரிய முக்குத்தி. இரு காதுகளிலும் தோடுகள், ஊஞ்சலாடும் தோற்றம். கன்னத்தில ஒரு கருமையான வடு. தோடுகளின் பார்த்தால்,  காதுகள் நிண்டு, தோடுகளுக்கு ஊஞ்சலாக இயங்கின.  அது தான் பங்கஜப் பாட்டியின் தோற்றம்.

அவன் எடுத்து அந்த முதற் போட்டோ எதிர்பாராதவாறு புகைப்படக் கண்கட்சியொன்றில் முதல் பரிசை அவனுக்குப் பெற்றுக் கொடுத்தது, அதுவே கெமராவின் வில்லையினூடாக அவனது பார்வை வளர்வதற்கு அத்திவாரமிட்டது. பின் ஏராளமான படங்களை நித்தியானந்தன் எடுத்து பிரபல்யமானான். திருமணங்களிலும, பி;றந்தநாள் கொண்டாட்டங்களிலும், நித்தியானந்தன் தான் முக்கிய போட்டோகிராபர். காலப்போக்கில் தனக்கெனப் புகைப்படம் எடுக்கும் கடையொன்றை தன் தம்பி சத்தியநாதனின் உதவியோடு ஆரம்பித்தான்.

பணம் அவனைத் தேடி வந்தது. புகைப்படத்துக்கு உகந்த தோற்றமுள்ள உருவங்களை அவன் கண்கள் தேடி அலைந்தான். நேரில் பார்த்தால் அழகி எள்று சொல்ல முடியாத தோற்றமுள்ள உள்ள பெண்ள் கூட அவன் பார்வைக்கு வித்தியாசமாகத் தென்பட்டார்கள்.  ஆங்கிலத்தில் போட்டோஜீனிக் (Photogenic)என்பார்களே, அத்தகைய தோற்றமுள்ளவர்களை அவன் கண்கள் தேடி அழைந்தன. அவன் எடுத்த பல பெண்களின் படங்கள் அவனுக்கு அவ்வளவு திருப்திகரமாக இருக்கவில்லை.

வாழக்கையில் நித்தி எடுத்த படங்களில் மூன்று பெண்களின் படங்களை அவனால் மறக்க முடியாது. அதில் அவன் இரசித்து எடுத்த முதல் பெண். கோயில் வாசலில் பூ விற்றுக் கொண்டிருந்த முத்தழகியை என்ற பூக்காரியினுடயது அவன் எதிhபாராத வாறு கோயிலுக்கு போன போது காண நேரிட்டது. தனக்கு பூ வி;ற்ற முத்தழகியின் சிரிப்பால் கவரப்பட்டான் நித்தி. அந்த முத்துப்பற் சிரிபபோடு அவளை தன் கமராவுக்குள்; அடக்கிக் கொண்டான். காலப்போக்கில அப்பெண் ஒரு சினிமா நடிகையானாள்.

இரண்டாவது அவன் ரசித்து எடுத்த பெண் பதினாறு வயதுடைய  ஒரு கல்லூரி மாணவி மீராவுடையது. அவளின் கள்ளம் கபடமற்ற வட்டமான முகம், நீண்ட உருண்ட கருவிழிகளின் பார்வை, அவளின் முகத்தைத் தன் கெமராக்குள் அடக்க வேண்டும் என்ற ஆசையை அவனுக்குத் தோற்றுவித்தது, எத்னையோ பெண்களின் பார்வைகளைக் கண்டு பல கோணங்களில் படம் எடுத்த அவனுக்கு மீராவின் பார்வை ஒரு வித்தியாசமான, பார்த்தவர்களைக் கவரக் கூடிய பார்வையாக அவன் கண்களுக்குத் தெரிந்தது. மீரா கவிதை புனைவதில் கெட்டிக்காரி. அவள் படித்த கல்லூரியின் வருடாந்த சஞ்சிகையில் அவள் எழுதிய “பார்வை” என்ற கவிதையை எல்லோரும் இரசித்தார்கள். அது மட்டுமா அவளின் படமும் கவிதையோடு பிரசுரமாகி இருந்தது. கவிதையின் தலைப்புக்கு பொருத்தமான படம். அந்தப் படத்தை மிராவின், பார்வை என்ற கவிதைக்காக  அவள் கேட்டு நித்தியானந்தன் எடுத்த படம்..

நித்தி பதின்இரண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த கல்லூரிக்கு சித்திரா ஆசிரியையாக வந்த முதல்நாளே  அவன் பார்வைக்கு அவள் வித்தியாசமாக தென்பட்டாள். அவளைப் பேரழகி என்று சொல்லமுடியாது ஆனால் அவளது கண்களும, பார்வையும், சிரிக்கும் போது குழிவிழும் கன்னங்களும், வில போன்ற புருவமும்ஈ நித்;தியின் கெமராவுக்குள அடங்கக்கூடிய தோற்றம் உள்ளவள். ஒரு ஆசிரியையை மாணவன் எவ்வாறு படம் பிடிக்க முடியும்? அவன் படிக்கும் கல்லூரியில் கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. சித்திராவுக்கு நித்தி ஒரு போட்டோகிராபர் என்று மற்றைய ஆசிரியர்கள் சொல்லி தெரியவந்தது..

“உங்கள் தோற்றம் படத்துக்கு பொருத்தமாக இருக்கிறது டீச்சர். உங்களைப் படம் எடுக்க விருப்பப் படுகிறேன். சில நிமிடம் படத்துக்கு போஸ் செய்ய முடியுமா” என்று சித்திராவை நேரடியாகக் கேட்பதற்கு நித்திக்குப் பயம். சித்திரா கோபக்காரி. கண்டிப்பானவள். ஒழுக்கத்தை கடைப்பிடிப்பவள். தலமை ஆசிரியரிடம் போய் அவள் தன்னைப்பறறி முறையிட்டால்?, ஸ்கூலில் இருந்து வெளியேறவேண்டியது தான். ஏதாவது ஒரு நாளாவது தன் விருப்பம் நிறைவேறாமலா போகும். சித்திராவுக்கும் நித்திக்கும் இடையே குறைந்தது ஐந்து வயது வித்தியாசம்.

சித்திராவின் தோற்றத்தைத் தினம் தினம் தனக்குள் நித்தி இரசித்துக் கொள்வான். சித்திராவுக்கு ஒரு காதலன் இருப்பது நித்திக்குத் தெரியவந்தது. அடிக்கடி இருவரும் சந்திப்பதை கண்டிருக்கிறான். காதலனை அணுகிச் சித்திராவை படமெடுக்க உதவக் கேட்டால் என்ன? அவன் உதவ மறுத்தால் வேறு வழியைப்பார்க்க வேண்டியதுதான். நித்தி எதிர்ப்பார்த்தது ஒரு நாள் நடந்துவிட்டது.

“நித்தி நீ மறக்காமல் எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும். செய்வியா”?, என்று கூடவே படித்த அவன் நண்பன் சேகர் கேட்டான். சேகர் படித்து முடித்து அரசாங்கத்தில் பெரும் பதவியில் இருப்பவன். நித்திக்கு தேவைப்பட்ட நேரம் புகைப்படக் கருவிகள் வாங்கப் பணஉதவியும் செய்திருக்கிறான். இரு மாதங்களுக்கு முன்னர் 12,000 டொலர்கள் பெறுமதியான, விலை உயர்ந்த கெமராவான நிக்கோன் கெமெரா வாங்க பண உதவி செய்தவன். அவன் உதவி கேட்டால் எப்படி நித்தியால் மறுக்க முடியும்?

“என்ன உதவி சேகர் தேவை?” நித்தி நண்பனைக் கெட்டான்.

“எனது மனேஜருக்கு ஒரு கிழமையில் திருமணம் நடக்கவிருக்கிறது. நீ அவருடைய திருமணத்தில் ஒபிசல் போட்டோகிராபராக படம் எடுக்க முடியமா?.

“நிட்சயமாக நான் உனது மனேஜரின் திருமணத்துக்கு வந்து படம் எடுக்கிறேன். நீ உதவி செய்து நான் வாங்கிய நிக்கோன் கெமெராவைத்தான் நான் பாவிக்கப்போகிறேன். இந்தக் கெமெராவில் எடுக்கும் படங்கள் வெகு தெளிவாக இருக்கும்” என்றான். நித்தி.

“நான்ஒன்றை சொல்ல மறந்திட்டன். மணமகனையும், மனமகளயும் தனித்தனயே வைத்து பல கோணங்களில் படம் எடுக்க வேண்டும். அத்ற்கான செலவை என் மனேஜர் தருவார்”

“அதில் பிரச்சனையில்லை. எனக்கு அவர் பணம் தரத்தேவையில்லை. நீ எனக்குச் செய்த உதவிக்கு இது பிரதி உபகாரமாய் இருக்கட்டும” என்றான் நித்தி.

நித்தியை தன் மனேஜரின் திருமணத்துக்கு தன் காரில் சேகா அழைத்துச் சென்றான். திருமணத்துக்கு ஏகப்பட்ட கூட்டம். மணமகனை சேகர் நித்திக்கு அறிமுகப்படுத்தி வைத்தபோது அவரை எங்கையோ பார்த்த ஞாபகம் நித்திக்கு வந்தது. முதலில் மணமகனான சேகரின் மனேஜரை ரவிச்சந்திரனைப் படம் எடுத்த பின்னா,; ணமகள் இருந்த அறைக்குள் நித்தியை அழைத்துச் சென்றான் சேகர்.

“டீச்சர் மீட் மை பிரண்ட் நித்தி. உங்களுக்கு ஏற்கனவே இவரைத் தெரியும் என நினைக்கிறேன். என் கூடவே ஒன்றாகப் படித்தவர்”, என்று நித்தியை மணமகளுக்கு  அறிமுகப்படுத்தினான் சேகர்.

மணமகளை அலங்காரத்தோடு கண்டதும் நித்தியானநதன்  வாயடைத்துப் போனான். அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை.

“என்ன நித்தியானந்தன் திகத்துப்போய் நிற்கிறீர்? என்னை நினைவிருக்கிறதா? நான்தான் நீர் படித்த கல்லாரியில் படிப்பித்த சித்ரா டீச்சர். எனக்கு கணவானாக வரப்போகிறவரை எனது கல்லாரியில் என்னை அவர் சந்திக்க வரும் போது பார்திருப்பிரே” என்றாள் சிரித்தபடியே  சித்திரா.

சித்திரா சொன்னதைக் கேட்டு, நித்தியானந்தன் அதிர்ச்சியடைந்தான். அதிலிருந்து அவன் மீள சில வினாடிகள் எடுத்தன.

“என்ன  நித்தி பேசாமல் என்னைப் பார்தத்படியே நிற்கிறீர். என்னை உமக்கு நினைவிருக்கிறதா “?

“இப்போ நல்லாய் உங்களை நினைவிருக்கிறது டீச்சர். நீங்கள் படிப்பித்தபோது உங்களை படம் எடுக்கு வேண்டும் என்று பார்வைக்குப் பட்டது. ஆனால் பயத்தில் நான்உ ங்களைக் கேட்கவில்லை. நீங்கள் ஒரு கண்டிப்பான டீச்சர் என்று மற்றைய டீச்சர்கள் சொல்லிக் கேள்விப்பட்டனான். நான் அ ப்படி உங்களைப் படம்எடுக்க விருப்பமாக இருக்கிறது என்று கேட்டு, அதை நீங்கள் தவறாகப் புரிந்து,பிரின்சிபலுக்குமுறையிட்டால், பிறகுஎன்னை ஸ்கூலில் இருந்து வெளியே போகச் சொல்லிவிடுவார்கள் என்ற பயம் எனக்கு. அது தான்…” என்று தன பேச்சை இழுத்தான் நித்தியானந்தன்;.

“பார்த்தீரா எப்படி உமது எண்ணம் இப்போ நிறைவேறப் போகிறது என்று. நீர் விரும்பியபடி என்னை எத்தனை கோணத்திலும் வைத்துப்; படம் எடுகலாம்.  ரவி உமக்கு ஒன்றும் சொல்லமாட்டார்”, என்றாள் சித்திரா.

சேகருக்கு அவர்களுடைய உரையாடலைக் கேட்க ஒரு சினிமாக் கதை போல் இருந்தது.

நித்தியனந்தன் தன் கலைத்திறனைக் காட்ட  தன புது நிக்கோன் கமராவோடு தயார் ஆனான். இது அவன் விரும்பிப் படம் எடுக்கப் போகும் மூன்றாவது பெண்.

                                                                    ♣♣♣♣♣

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

“பார்வை” Copyright © 2016 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book